BREAKING NEWS
latest

Saudi News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Saudi News News, Articles, Saudi News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Sunday, February 11, 2024

முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமாலான் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே

சவுதி அரேபியா ஷஃபான் மாதம் துவங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Image credit: பிறை தென்பட்ட காட்சி

முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமாலான் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே

சவுதி அரேபியாவில் ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் ரஜப் மாதம் 29 ஆம் நாள் நேற்றுடன் முடிவடையும் நிலையில், நேற்றைய தினம் ஷஃபான் மாதத்திற்கான பிறை தேடும் நாளாக கருதப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு ஜித்தாவில் தொலை நோக்கி வழியாக ஆய்வு செய்த போது பிறை தென்பட்டதன் அடிப்படையில், இன்று (11-2-2024) ஞாயிற்றுக்கிழமை ஷஃபான் மாதத்தின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் துவங்க இந்த ஒரு மாதம் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பிறை தென்பட்ட கூடுதல் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

Image credit: பிறை தேடும் காட்சி

Image credit: பிறை தேடும் காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Ramadan 2024 | Gulf Ramadan |

Add your comments to Saudi News

Wednesday, February 7, 2024

சவுதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா விமர்ச்சையாக நடைபெ‌ற்றது

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர் கலை விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது

Image : நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் விழா குழுவினர்

சவுதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா விமர்ச்சையாக நடைபெ‌ற்றது

ரியாத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் தமிழ் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கல்வி, விளையாட்டு, (கலை)தனித்திறன் போன்ற சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிப்பது வழக்கம். அந்த வரிசையில் இவ்வருடமும் ரியாத்தில் உள்ள 9 இந்திய பன்னாட்டுப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவ/மாணவிகள் பெருவாரியாகப் பங்கு கொண்ட மாணவர் கலைவிழா 2024 நிகழ்ச்சி, 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வெகுவிமர்சையாக துவங்கியது

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலையிலும், இலங்கைத் தூதர் தலைமையிலும், இந்திய பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பல பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வழக்கமான பேச்சு, இசை, நடனம், நடிப்பு மட்டுமின்றி, பாவனை நாடகம் (Mimes) குறும்படம் மற்றும் டிஜிட்டல் கலைகள் போன்ற புதுமையான திறமைகளையும் அரங்கேற்றி கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.

இக்கலை விழா தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்த்தது என்றால் அது மிகை அல்ல. இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தங்களது குழந்தைகளின் திறமைகளை வெளிகாட்ட உதவுவதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும், கடந்த வருடம் படிப்பு, தமிழ் மொழித்திறன், விளையாட்டு, மற்றும் தனித்திறமைகளில் சாதனை படைத்த மாணவர்களையும், சிறப்பாக சேவையாற்றி வரும் தமிழாசிரியர்களையும் கெளரவித்து விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வெற்றிவேல், சிறப்பு விருந்தினர் மேதகு திரு. பி.எம். அம்ஸா, விழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு. இம்தியாஸ், திரு. மதி சிறப்புரை வழங்கியதுடன் வருங்கால தலைமுறை தமிழ், தமிழர் நலன், கல்வி, கலைத்திறமையில் சிறந்து விளங்கவேண்டும் அது வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தினார்கள். பெருவாரியாக, தமிழ் நெஞ்சங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஷமீம் அவர்களின் நன்றியுரை, அதனை தொடர்ந்து நாட்டுப்பண்ணுடன் இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

Add your comments to Saudi News

Wednesday, January 24, 2024

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி மதுபானக் கடையை திறக்கத் தயாராகி வருகிறது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : சவுதி அரேபியா சிட்டி

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை தலைநகர் ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது, இது முஸ்லீம் அல்லாத குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள வெளிநாட்டினருக்காக மட்டுமே சேவை செய்யும் என்ற செய்தி இன்று(24/01/24) மாலையில் வெளியாகியுள்ளது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், முஸ்லீம் கொள்கைகள் தீவிரமாக பின்பற்றும் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும். எண்ணெய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை உருவாக்க விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

மேலும் முஸ்லீம் அல்லாத சாதாரண வெளிநாட்டினர் இந்த கடைக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லை. மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை சற்றுமுன் பல பிரபலமான செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Alcohol Store | First Shop

Add your comments to Saudi News

Wednesday, January 10, 2024

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்:

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்

Image credit: உயிரிழந்த தமிழர்கள்

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் அங்கு வீட்டு ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர். உயிரிழந்தவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. வாளமங்கலத்தை சேர்ந்த தாஜ் முஹம்மது மீரா மொய்தீன்(வயது-42) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா முஹம்மதலி(வயது-66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் குளிர்காலம் கடுமையாக நிலவி வருகின்ற நிலையில் குளிரில் இருந்து தப்ப நெருப்பு முட்டியதே இந்த துயரமான சம்பவம் ஏற்பட காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியை பயன்படுத்தி உணவு சமைத்த பிறகு, குளிரில் இருந்து தப்பித்து தூங்குவதற்காக மீதமுள்ள நிலக்கரியை அறையில் தீப்படுக்கை தயார் செய்தனர். அவர்கள் தூங்கும் போது அறையில் இருந்த புகையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், புகையை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரும் வேலைக்கு வராத காரணத்தால் தேடிய பொது காலையில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே ஸ்பான்சரின் கீழ் பணிபுரிந்து வந்தவர்கள். முஸ்தபா 38 வருடங்களாக இந்த ஸ்பான்சரின் கீழ் ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. நடைமுறைகள் முடிந்த பின் தம்மாமில் உடல் அடக்கம் செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் வக்கம் தெரிவித்தார். குளிர் காலநிலையில் தீமூட்டி குளிர் காய்தல் மற்றும் மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு மீண்டும் வலியுறுத்தியது. தமாமில் உள்ள கதீஃப்பில் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்ததாலும் குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் குளிரில் இருந்து தப்பிக்க இதுபோன்று தீ மூட்டி மூச்சுத்திணறி உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது. குவைத்திலும் கடந்த சில வருடங்களில் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதே காரணத்திற்காக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத் தீயணைப்பு துறையையும் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக மூடிய காற்றே வாராத அறைகளில் நிலக்கரி மற்றும் கரிக்கட்டை பயன்படுத்தி தீப்படுக்கை தயார் செய்ய கூடாது என்று எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. அப்படி செய்தால் தூங்கும் முன்னர் அதை அணைத்து விட்டு தூங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Fire Accident | Death Dammam

Add your comments to Saudi News

Tuesday, October 10, 2023

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர் வெடிகுண்டு இல்லை என்று கூறியதால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

Image : Saudi Arabia Airport

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில், தனது பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதால் வெடிகுண்டு இல்லை என்று கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறுதியாக ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒத்துழையாமை மற்றும் தவறாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

துபாய் செல்வதற்காக தமாம் விமான நிலையத்திற்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கினார். Fly Dubai விமானத்தில் டிக்கெட் எடுத்து கொண்டு, அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது பிடிபட்டார். பையில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதற்கு, கோபமடைந்த பயணி விமான நிலைய அதிகாரியிடம் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறினார்.

இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மோப்ப நாய் அடங்கிய தீவிரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு பிரிவினர் பயணியை கைது செய்ய விரைந்தனர். அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு, நாட்டில் நுழைய முடியாதபடி நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய தகவலறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது மனைவி தமாமில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தூதரகத்தின் உதவியுடன் சட்ட உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் நீதிமன்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டதால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர் தமாமில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Engineer | Saudi Airport | Saudi Jail

Add your comments to Saudi News

Sunday, July 16, 2023

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் உள்ள அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Image : தீயிணை அணைக்கும் காட்சி

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான அல்-ஹஸ்ஸாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் நேற்று(14/07/23) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பட்டறையில் வேலை செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அடையாளம் காணப்பட்ட 5 இந்தியர்களில் ஒருவர் விபரங்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் நெடுமங்காடு அடுத்த அழிக்கோடு அருகே வசித்து வந்த அஜ்மல் ஷாஜகான் என்கிற நிஜாம் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேர் இந்தியாவில் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல் இருவர் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. கார் பணிமனையில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் பட்டறைக்கு மேலே வசித்தவர்கள். உடல்கள் அல் ஹாசா சென்டரல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த 10 தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

Saudi Arabia | Fire Accident | Indians Died

Add your comments to Saudi News

Wednesday, May 31, 2023

சவுதியில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு

சவுதி அரேபியாவில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை வரும் ஞாயிறு முதல் போக்குவரத்து கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் கண்காணிக்க முடிவு என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : சவுதி சாலை

சவுதியில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு

சவுதி அரேபியாவில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு. வரும் ஞாயிறு முதல் கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் இவை கண்காணிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்.ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி தெரிவித்தார்.

மஞ்சள் கோடுகளுக்கு அப்பால் சாலை ஓரங்களில் உள்ள இடங்கள், நடைபாதைகளிலும், வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்ட பாதைகளிலும் வாகனங்கள் ஓட்டுவது, இரவு நேரங்களிலும், வானிலை மாற்றம் காரணமாக பார்வையை குறைக்கும் நேரங்களில் வாகனத்தின் விளக்குகளை எரிய விடாமல் இருப்பது, டிரக்குகள் மற்றும் கனரக வாகனங்கள் இரட்டைப் பாதையின் வலதுபுறத்தில் ஒட்டி செல்லாமல் இருப்பது, பொதுச் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை மதிக்காமல் இருப்பது, சேதமடைந்த அல்லது புரிந்துகொள்ள முடியாத எண் கொண்ட நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுதல், பார்க்கிங் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், தானியங்கி கேமராக்கள் வாகனங்களின் எடை மற்றும் அளவையும் பதிவு செய்யும் மற்றும் சோதனைச் சாவடிகளில் நிற்காதது ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் கண்காணிப்பு கேமராக்களுடன் போக்குவரத்து போலீஸ் மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் புதிதாக சேர்க்கப்பட்ட விதிமீறல்கள் கண்காணிக்கப்படும். பாதுகாப்பான வாகன போக்குவரத்தை உறுதி செய்தல் மற்றும் வாகன விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி அவர் மேலும் கூறினார்.

Add your comments to Saudi News

Monday, May 29, 2023

சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பதாக சவுதி தூதரகம் ஏஜென்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது

Image credit: கைரேகை பதிவு VFS மையம்

சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக செல்வோருக்கு பணி விசா வழங்க கைரேகை கட்டாயம் என்ற விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விசா விண்ணப்பிப்பவர்கள் விஎப்எஸ் மையத்துக்குச் சென்று கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக கடந்த 23-ஆம் தேதி சவுதி துணைத் தூதரகம் தெரிவித்திருந்தது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு(அதாவது நேற்று இரவு) சவுதி தூதரகம் தற்காலிக முடக்கம் குறித்து ஏஜென்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

மேலும்அதில் ஜூன்-28,2023, ஈத்-உல்-அதா(தியாகத் திருநாள்) வரை அறிவிக்கப்பட்ட சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பண்டிகை விடுமுறைக்குப் பிறகு தூதரகம் செயல்படத் தொடங்கும் போது இது பற்றிய கூடுதல் தகவல்கள் தெளிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், விசிட் விசாவுக்கு விஎப்எஸ் மையத்திற்குச் சென்று கைரேகைகளை வழங்க இம்மாத தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சட்டம் தொடரும். இது தொடர்பாக சவுதி தூதரகத்திடம் இருந்து எந்த புதிய தகவலும் இல்லை. பணி விசா முத்திரை பதிக்க விண்ணப்பதாரர் கைரேகை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முடிவும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Add your comments to Saudi News

Sunday, April 23, 2023

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட முதல் குழு சவுதியை வந்தடைந்தது

சவுதி கப்பற்படை இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரை இதுவரை சூடானில் இருந்து மீட்டுள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது

Image : வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட முதல் குழு சவுதியை வந்தடைந்தது

உள்நாட்டு போர் காரணமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை சவுதி வழியாக இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் சவுதிக்கு சென்றுள்ளது. ஆனால் போர் கடுமையாக நடைபெற்று வருவதால் விமானங்களை சூடானின் விமான நிலையங்களில் பாதுகாப்பாக இறக்கும் சூழல் தற்போதைய நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேரடியாக சென்று இந்தியர்களை மீட்க எடுக்க வேண்டிய மற்ற வழிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்திய உள்ளிட்ட பல நட்பு நாடுகள் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாடுகளை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்க சவுதிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சவுதி வழியாக சூடானில் சிக்கியுள்ள நபர்களை மீட்பது என்பது எளிது. இதற்கு காரணம் ஜித்தா துறைமுகம் மிகவும் அருகில் உள்ளது . இதையடுத்து சவுதி கப்பற்படையின் முதல் கப்பல் தன்னுடைய நட்பு நாடுகளான இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த சூடானில் சிக்கியிருந்த நபர்களை மீட்டெடுத்து ஜித்தாவை வந்தடைந்தது. சூடானின் பிரச்சினைகள் குறைவாக உள்ள, எளிதாக மிக்க முடிந்த பகுதியில் இருந்து இவர்களை மீட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியர்கள் சிலரும் பத்திரமாக சவுதி வந்தடைந்தனர். சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

சவுதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 91 குடிமக்களையும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 பேரையும் பத்திரமாக வெளியேற்றியதாக அறிவித்துள்ளது. இதில் குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், இந்தியா, பல்கேரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Navy | Sudan War | Evacuation Sudan

Add your comments to Saudi News

Wednesday, April 19, 2023

சவுதிக்கு செல்லும் இந்தியா உட்பட 7 நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது

சவுதியில் இனிமுதல் விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Image : Saudi City

சவுதிக்கு செல்லும் இந்தியா உட்பட 7 நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது

இதன்படி மே-1 முதல் சவுதியில் பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் மாதிரியிலான ஸ்டாம்பிங் செய்யப்படும் விசாவானது ரத்து செய்யப்படுகிறது. Work, Visit மற்றும் Resident விசாவில் சவுதி அரேபியாவிற்கு வருபவர்களுக்கு இனி QR கோடு பதிக்கப்பட்ட ஆவணத்தை(A4-தாளை) சரிபார்த்து விமான நிறுவனங்கள் பயண அனுமதி வழங்க வேண்டும் எனவும், சிவில் விமான போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவை தவிர அமீரகம், எகிப்து, ஜோர்டான், இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பாஸ்போர்ட்டிலும் விசா ஸ்டிக்கர் ஒட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | Saudi Permit | Saudi Jobs

Add your comments to Saudi News

Tuesday, March 14, 2023

இந்தியரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இடையேயும் நினைத்ததை முடிந்த மாமனிதர்

சவுதியில் சிறையில் இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு சவுதி குடிமகன் இரண்டு கோடி வசூல் செய்த நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : அவதேஷ் சாகர் மற்றும் ஹாதி பின் ஹமூத்

இந்தியரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இடையேயும் நினைத்ததை முடிந்த மாமனிதர்

கார் விபத்து வழக்கில் சவுதி அரேபிய சிறையில் ஐந்தரை ஆண்டுகளாக இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு சவுதி பிரஜை ஒருவர் முன்வந்துள்ளார். சமூக வலைதளப் பிரச்சாரம் மூலம் சொந்த சமூகத்திடம்(சவுதி குடிமக்களிடம்) இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடி ரூபாயை Blood Money திரட்டிய ஹாதி பின் ஹமூத், நாடு, மொழி, மதம் கடந்து நன்மைக்கும் கருணைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜாப்பூரைச் சேர்ந்த அவதேஷ் சாகர்(வயது-52) சவுதி குடிமக்களின் கருணையால் பலருக்கும் உதவி வருகிறார். சவுதியின் குவையாவில் உள்ள அலஹ்சா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிஷா அருகே ரியாத்-துவைஃப் சாலையில் நடந்த கார் விபத்தில் அவர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். தண்ணீர் வினியோகம் செய்யும் லாரி ஓட்டுவது இவரது வேலை. இவர் சவுதியில் தங்கிஓட்டுநர் உரிமம் மற்றும் இகாமா இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தார். ஒரு நாள் மாலை, ஒருவழிப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வளைவில் வேகமாக வரும் வாகனங்களைத் தவிர்ப்பதற்காக, பக்கவாட்டாகச் சென்ற அவரது லாரியின் மீது சவுதி இளைஞன் ஒருவரின் பிக்கப் பலமாக மோதியது

இந்த பயங்கரமான விபத்தில் வாகனம் அருகில் இருந்த பாறை குவியல் மீது விழுந்ததில் வாகனத்தில் இருந்த மூன்று பெண்களும் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர். அவருடன் இருந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உரிமம் மற்றும் இகாமா இல்லாததால் அவதேஷ் சாகர் முழு குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். உயிரிழந்த நால்வருக்கும், காயமடைந்த சிறுமிக்கும் இழப்பீடாக விதிக்கப்பட்ட தொகை 9,45,000 ரியால்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவதேஷுக்கு இந்தத் தொகை நினைத்துப் பார்க்க முடியாதது.

இந்த மனிதனால் சிறையில் தனது தலைவிதியை நினைத்து தினமும் அழுது புலம்புவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவரது மனைவி சுசீலா தேவி மற்றும் 10 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு சொந்தமாக தங்க வீடு கூட இல்லை. இதற்கிடையில், அவதேஷின் இரண்டு பெண்கள் இறந்தனர். வாழ வழியின்றி அலைந்து கொண்டிருந்த அவதேஷின் குடும்பம், அவரது விடுதலைக்காக தட்டாத கதவுகள் இல்லை.ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

அவதேஷின் குற்றமற்ற தன்மையை அறிந்த சிறையிலுள்ள போலீசார் சிலர் உள்ளூர் சமூக சேவகர் ஹாதி பின் ஹமூத் என்பவரிடம் இதனைத் தெரிவித்தனர். ஹாதி பின் ஹமூத் சிறைக்கு சென்று அவதேஷை சந்தித்து தகவல் சேகரித்தார். வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தாலும் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்கவே முடியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது இயலாமையை உணர்ந்த ஹாதி பின் ஹமூத்,அவதேஷுக்கு உதவ முன்வந்தார்.

அவதேஷின் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக தளங்கள் மூலம் சவுதி சமூகத்தில் பரவலாகப் பரவியுள்ளன. மேலும் ஹாதி பின் ஹமுதின் உதவிக்கான வேண்டுகோள் தொடர்பான ஒவ்வொரு வீடியோ இடுகையிலும், அவர் இந்தியர்களுக்கும் சவுதிகளுக்கும் இடையிலான பாரம்பரிய நல்லுறவு பற்றி நினைவுபடுத்தினார்.

இதனால், சமூக வலைதளங்கள் மூலம் பணம் வசூலிப்பதாக சிலர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் உண்மையை உணர்ந்த சவுதி அதிகாரிகள் அவருக்கு தொண்டு நிறுவனத்துக்காக சிறப்பு வங்கிக் கணக்கு தொடங்க அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, ஊர் மக்கள் உதவ முன்வந்தனர். ஹாதி பின் ஹமூத் என்ற நல்ல மனிதர் வசூலித்த 9,45,000 ரியால்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் கட்டப்பட்டன. இதையடுத்து அவதேஷ் நாளை மறுநாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற மகிழ்ச்சியாக செய்தி வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Saudi News

Thursday, February 2, 2023

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு:

சவுதி அறிமுகம் செய்த 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் அறியாமல் இந்த புதிய வகையான விசாவுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

Image : Saudi Arabia City

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு

சவுதி வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை முதல் 96 மணிநேர " உங்கள் டிக்கெட் உங்கள் விசா" என்ற 4 நாட்கள் Validity உள்ள Transit விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதை எப்படி பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்:

இந்தியா, இலங்கை உள்ளிட்ட சவுதியுடன் வெளியுறவு வைத்துள்ள உலகின் எந்த நாட்டினராக இருந்தாலும், எங்கு வசிக்கின்ற நபர்களாக இருந்தாலும் இந்த விசாவை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

இந்த Transit Visa-வை நீங்கள் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் உங்கள் டிக்கெட்களை முன் பதிவு செய்யும்போது ட்ரான்சிட் விசாவிற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு பணத்தையும் இந்த நேரத்தில் செலுத்த வேண்டியது இருக்கும்.

விசா பெற முயற்சிக்கும் நபர் இந்த தளங்களில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது Multiple City Option-ஐ தேர்வு செய்து இந்த இலவச விசா பெறுவதற்காக உங்கள் புகைப்படம் மற்றும் சில விபரங்கள் பதிவேற்றியவுடன் நீங்கள் பதிவு செய்கின்ற உங்களுடைய Mail ஐடிக்கு 3 நிமிடங்களில் விசா வந்து சேரும்.

இப்படி பெறுகின்ற விசாவின் அதிகபட்சமாக செல்லுபடியாகும் நாட்கள் 90 தினங்கள் மட்டுமே. இந்த 90 நாட்களுக்குள் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சவுதியில் நுழைந்த பிறகு அதிகபட்சமாக 4 நாட்கள்( 96 மணிநேரம்) அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த நான்கு நாட்களில் உம்ரா செய்வது அல்லது சவுதியின் எந்த இடத்திற்கும் செல்லலாம் சுற்றி பாக்கலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம், உங்கள் உறவினர்கள் அங்கு இருந்தால் அவர்களை சென்று சந்திக்கலாம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். உம்ரா செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான செயலி வழியாக விண்ணப்பித்து கூடுதலாக அனுமதி பெற வேண்டும்.

இந்த புதிய விசா பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:

Transit என்ன என்பது தெரியாத நபர்களுக்கு இந்த ஒரு வரி விளக்கம். எடுத்துகாட்டாக நீங்கள் துபாயில் இருந்து இந்தியா வருகின்ற நபர் என்று வைத்து கொள்ளுங்கள். பலர் பயணச்சீட்டு அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் நேரடியான விமானங்கள் பயன் படுத்தி இந்தியா வருவதில்லை. மாறாக இடையில் ஓமன், குவைத், சவுதி, கத்தார் இப்படி எதாவது ஒரு நாட்டின் விமான நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அல்லது அதே விமானத்தில் அங்கிருந்து சென்னைக்கான விமானத்தில் வருவார்கள் இதுவே Transit எனப்படும்.

இப்படி வருகின்ற நபர்களுக்கு இந்த புதிய வகையான விசா பயன்படுத்தி சவுதியில் நுழைய முடியு‌ம். ஆமா கண்டிப்பாக நீங்கள் இன்னொரு நாட்டிற்க்கு செல்வதற்காக மற்றொரு விசாவை வைத்திருக்கின்ற நபராக இருக்க வேண்டும்.

மேலும் புரிதலுக்காக நீங்கள் இந்தியர் என்று வைத்து கொள்ளுங்கள் துபாயில் வேலைக்காக சென்று தங்கியுள்ள நபர் விடுமுறைக்காக தாயகம் வருகின்ற நேரத்தில் இந்திய புதிய விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பிறகு இந்தியா கிளம்பலாம். இதுபோல் விடுமுறைக்காக இந்தியா வந்த நபர் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் மீண்டும் துபாய்க்கு இந்தியாவில் இருந்து கிளம்பும் போதும் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு தங்கியிருந்து மீண்டும் துபாய் புறப்பட்டு செல்ல முடியும்.

மாறாக எந்தவொரு நாட்டின் விசாவும் இல்லாத நபர் நீங்கள் என்றால் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டவராக இருந்தாலும் சவுதி சென்று மீண்டும் தாய்நாடு திரும்ப முடியாது. ஆமா இந்த புதிய வகையான விசா உங்களுக்கு கிடைக்காது.

இல்லாமல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டில் இருந்து இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதிக்கு சென்று மீண்டும் உங்கள் நாட்டிற்கே திரும்புவது என்ற இருவழி பயணத்தை மேற்கொள்ள முடியாது. சுருக்கமாக சொன்னால் நீங்கள் இன்னொரு நாட்டின் விசா கைவசம் வைத்திருந்தால் இடையில் சவுதியில் இறங்கி 4 நாட்கள் அங்கு செலவிட்டு மீண்டும் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | New Visa | Transit Visa

Add your comments to Saudi News

Saturday, December 4, 2021

சவுதியில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image credit: உயிரிழந்த குடும்பம்

சவுதியில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் கேரளா மாநிலம், கோழிக்கோடு அடுத்த பேப்பூர் பகுதியை சேர்ந்த முஹம்மது ஜாபிர்(வயது-44), அவரது மனைவி ஷப்னா(வயது-36) மற்றும் குழந்தைகள் லைபா(வயது-7) சாஹா(வயது-4) மற்றும் லுட்ஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வேலை மாறுதல் காரணமாக குடும்பத்துடன் நேற்று(03/12/21) வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்துடன் ஜுபைலில் இருந்து ஜிசான் நகருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது. ஜாபிர் கடந்த 18 வருடங்களாக சவுதியில் பணியாற்றி வருகிறார்

அவர்கள் சென்ற கார் மற்றொரு சவுதி குடிமகனின் வாகனத்தின் மீது மோதியது. குறிப்பிட்ட நேரம் கடந்தும் குடும்பம் ஜிசானை அடையத் தவறிய நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது விபத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து உடல்களும் அல்ரைன் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

இறந்த குடும்பத்தினர் உடல்களை இந்திய கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கேரளா வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் முஹமது ரியாஸ் தெரிவித்தார். இதுகுறித்து நோர்காவை(கேரளா வெளிநாடு வாழ் தொழிலாளர்கள் நலத்துறை) தொடர்பு கொண்டு உள்ளனர் எனவும்,மாவட்ட ஆட்சியர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே பேப்பூரில் உள்ள இறந்தவர்கள் வீட்டுக்குச் சென்ற அமைச்சர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Add your comments to Saudi News

Friday, October 15, 2021

சவுதியில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் திறந்த வெளியில் முகக்கவசம் தேவையில்லை என்பது உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது

சவுதியில் கூடுதல் சலுகைகள் அறிவிப்பு;ஞாயிற்றுக்கிழமை முதல் திறந்த வெளியில் முகக்கவசம் தேவையில்லை

Image : சவுதி அரேபியா

சவுதியில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் திறந்த வெளியில் முகக்கவசம் தேவையில்லை என்பது உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது

சவுதி அரேபியா கோவிட் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தியிருந்த விதிமுறைகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. புதிய விலக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(17/10/21) முதல் அமலுக்கு வருகிறது. ஏழு புதிய விலக்குகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் அது தொடர்பாக விரிவாக அறிவோம்.

  1. அனைவருக்கும் மக்கா மதீனாவிற்கு நுழைய அனுமதி. மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மதீனா மசூதி அல்-நபாவியின் முழுமையாக 100  சதவீதம் மக்கள் பயன்படுத்த முடியும்.  அனைத்து விசுவாசிகளுக்கும் நுழைய அனுமதி உண்டு. அங்குள்ள ஊழியர்கள்  மற்றும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாகும். மக்கா மற்றும் மதீனா மசூதிகளுக்குள் நுழைய, முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக தவக்கல்னா செயலி கட்டாயமாகும்.
  2. பொது நிகழ்வு அரங்குகள் மற்றும் திருமண அரங்குகள் திறக்கலாம். இஸ்ட்ராஹாவ் மற்றும் திருமணங்கள் உட்பட்ட விழாக்களில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.  மக்கள் ஹோட்டல், அரங்குகளிலும் முழு இருக்கைகளிலும் அமரலாம்.  சமூக இடைவெளி தேவையில்லை. இருப்பினும், மூடப்பட்ட அரங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
  3. இனி சமூக இடைவெளி தேவையில்லை. பொது இடங்கள், உணவகங்கள், பொது போக்குவரத்து மற்றும் சினிமா அரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க  வேண்டிய அவசியமில்லை. எல்லா இடங்களிலும் இரண்டு டோஸ் எடுத்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி.முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பராமரிப்பது தவக்கால்னா செயலி மூலம் சுகாதாரப் பரிசோதனை செய்யப்படாத பகுதிகளில் தொடரும். வாகனங்களிலும் சமூக இடைவெளி தேவையில்லை. அனைத்து இருக்கைகளிலும் அருகில் மக்கள் இருக்கலாம்.
  4. போது சேவை உள்ளிட்ட அலுவலகங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல  சுகாதார அமைச்சகத்தின் தனிப்பட்ட தகவல்களுக்கு தவக்கல்னா செயலியை காண்பிப்பது கட்டாயமாகும். இது இல்லாமல் நுழைவது சட்டவிரோதமானது. தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட நபர்களுக்கு மட்டுமே தற்போது  நிலையில் ஈமூன் ஸ்டேட்டஸ் காட்டும்.
  5.  நீங்கள் முகக்கவசம் பயன்படுத்த வேண்டிய இடங்களை மறந்துவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மூடப்பட்ட அரங்குகள் மற்றும் நிறுவனங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் செல்லும் நேரத்தில் முகக்கவசத்தை கட்டாயம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.உண்மையில் காற்றோட்டம் உள்ள திறந்த வெளியில் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை. அதிகாரிகள்  பரிசோதனை செய்கின்ற நேரத்தில் காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில் நிற்கின்ற நபர்கள் மறந்து முகக்கவசம் அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது உண்மை.
  6. குறிப்பாக புதிய அறிவிப்பு மூலம் அனைத்து இடங்களிலும் விலக்கு உடல்நலக்குறைவு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிரூபிக்கும் ஆவணத்தை அவர்கள் சமர்ப்பித்து இருந்தால் அது தவக்காலிலும் காட்டும். இதன் மூலம் அவர்கள் எல்லா இடங்களிலும் நுழைய முடியும்.
  7. நேரடியான விமான சேவைக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இது மிகவும் நம்பிக்கைக்குரிய செய்தி ஆகும். இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவிற்குள் நேரடியாக நுழைய அனுமதி பெற காத்திருக்கிறார்கள். கடந்த மாதம் இது தொடர்பாக விவாதிக்கப்பட்ட தகவலை  இந்திய தூதரகம் ட்வீட் செய்ததை தவிர தூதரகத்திலிருந்து எந்த புதிய தகவலும் வெளியாகவில்லை. சவுதி அரேபியாவில் பொழுதுபோக்கு நிகழ்சிகள் இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்கும்.  இதற்குப் பிறகு விமானங்கள் அனுமதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதிய அறிவிப்பு மூலம் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்ற எவரும் இதன் பலனை அடைய முடியும் . பெரும்பாலான சவுதி மக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸை எடுத்துக்கொண்ட நிலையில்  சவுதி அரேபியாவில் புதிய அறிவிப்பு மூலம் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும்.
  8. Add your comments to Saudi News

Wednesday, September 29, 2021

சவுதியில் போலியான பிசிஆர் சான்றிதழ் வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

சவுதியில் போலியான பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் சமர்பித்த வெளிநாட்டு தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Image : செய்தி பதிவுக்கான மட்டுமே

சவுதியில் போலியான பிசிஆர் சான்றிதழ் வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவிலிருந்து தனது நிறுவனத்தின் இரண்டு மேலாளர்களை(மேனேஜர்) பஹ்ரைனுக்கு அழைத்து வருவதற்காக King Fahd Causeway(கடல்வழி பாலம்) வழியாக சென்று மீண்டும் சவுதிக்கு திரும்பும் வழியில் இவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்ட நபர் குற்றவாளி என நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் காட்டுகின்றன. மேலும் நீதிமன்ற விசாரணையின் போது தன்னுடைய மேலாளர்களை விரைவில் பஹ்ரைனுக்கு அழைத்து வருமாறு தன்னுடைய நிறுவனம் அறிவுறுத்தியதாக குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நபர் நீதிபதிகளிடம் கூறினார்.

எனவே பிசிஆர் பரிசோதனை எடுக்க நேரம் கிடைக்கவில்லை எனவும்,அதற்கு பதிலாக அவர் சமூக ஊடகம் வழியாக ஒருவரிடம் உதவியை நாடினேன் எனவும்,அவர் போலியாக கோவிட் பரிசோதனை சான்றிதழை தயார் செய்து வழங்கியதாகவும் அவர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார். அதேபோல் 12 மாத சிறை தண்டனை முடிந்த பிறகு 41-வயதான தொழிலாளியை(குற்றவாளி) நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன்- 30,2021 அன்று சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டார் என்பது குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியிடவில்லை.

Add your comments to Saudi News

Tuesday, September 28, 2021

அனைவரும் நேரடியாக சவுதிக்குள் நுழைய அக்டோபர் முதல் அனுமதி என்ற செய்தி போலியானது

சவுதியில் நேரடியாக நுழைய அனைவருக்கும் அனுமதி என்று பரவும் ஸ்கிரீன் ஷாட் போலியானது யாரும் நம்ப வேண்டாம்

Image : போலியான செய்தியின் புகைப்படம்

அனைவரும் நேரடியாக சவுதிக்குள் நுழைய அக்டோபர் முதல் அனுமதி என்ற செய்தி போலியானது

சவுதியில் நேரடியாக நுழைய அனைவருக்கும் அனுமதி என்று பரவும் ஸ்கிரீன் ஷாட் போலியானது. அத்தகைய முடிவு எதையும் இன்னும் சவுதி உள்துறை அமைச்சகம் எடுக்கவில்லை எனவே அந்த தவறான செய்தியை யாரும் நம்பவேண்டாம். வருகின்ற அக்டோபர்-1,2021 அன்று 11:00 மணிமுதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நாட்டில் நேரடியாக நுழைய அனுமதி என்ற வண்ணத்தில் பிரபல சவுதியின் தினசரி நாளிதழின் பெயரில் போலியான ஸ்கிரீன் ஷாட் பரவி வருகின்றன.

தற்போதுள்ள விதிமுறைப்படி சவுதியில் இருந்து 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு தாயகம் சென்றவர்கள் நேரடியாகவும் மற்றும் இந்திய உள்ளிட்ட அவரவர் தாய்நாடுகளில் சவுதி அங்கீகாரம் வழங்கியுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் சவுதி நேரடியாக பயணத்தடை விதிக்காத மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து பிறகு மட்டுமே சவுதியில் நுழைய முடியும். இதில் எந்த மாற்றமும் இன்று செய்தி பதிவு செய்கின்ற இந்த நேரம் வரைவில் வரவில்லை. எனவே போலியான செய்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். வரும் நாட்களில் என்ன முடிவை சவுதி எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Add your comments to Saudi News

Wednesday, September 22, 2021

சவுதியின் தவக்கல்னா ஆப் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

சவுதியில் தவக்கல்னா ஆப் ஒரே நேரத்தில் இரண்டு போன்களில் வேலை செய்யாது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

Image : Application Interface

சவுதியின் தவக்கல்னா ஆப் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

சவுதி சுகாதார அமைச்சகத்தின் தகவல்களைக் கொண்ட தவக்கல்னா ஆப் ஒரே நேரத்தில் இரண்டு போன்களில் வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் VPN பயனர்களின் தொலைபேசிகளிலும் பயன்பாடு வேலை செய்யாது என்று ஆப் டெவலப்பர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தவக்கல்னா என்பது சவுதி அரேபியாவில் உள்ள மக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு செயலி ஆகும். மேலும் அவசரகாலத்தில் இரண்டாவது தொலைபேசியில் தவக்கல்னா app பயன்படுத்தலாம்.இதற்காக, பதிவு செய்யப்பட்ட தொலைபேசியில் வரும் OTP எண்ணை பயன்படுத்தி பதிவை முடிக்க முடியும்.இவ்வாறு செய்வதற்கு முன் நீங்கள் முதலில் பயன்படுத்தும் தொலைபேசியிலிருந்து வெளியேற வேண்டும்.

மேலும் தொலைபேசி எண் இல்லாத தொலைபேசிகளிலும் தவக்கல்னைப் பயன்படுத்தலாம் .இருப்பினும், சில காரணங்களால் தவக்கலை திறக்க முடியாவிட்டால், பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் OTP ஐ மீண்டும் பெற வேண்டும்.கூடுதலாக, VPN பயன்படுத்தும் போன்களில் செயலி வேலை செய்வதை நிறுத்திவிடும். App யை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க VPN ஐப் பயன்படுத்தும் போது தவக்கல்னா வேலை செய்யாது என்றும் மேலும் சவுதி அரேபியாவில் முன் அனுமதி இல்லாமல் VPN பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளனர் .மொபைல் சேவை வழங்குநர்கள் பெரும்பாலும் VPN இன் இயற்கைக்கு மாறான மற்றும் சட்டவிரோத பயனர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கின்றனர்.இவ்வாறு சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

Add your comments to Saudi News

Tuesday, September 14, 2021

சவுதியில் விசிட் விசா காலாவதி கோவிட் மூலம் நீட்டிக்கப்பட்ட நடைமுறைக்கு முற்றுபுள்ளி, காலாவதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை

சவுதியில் விசிட் விசா காலாவதியாகும் முன்னர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

சவுதியில் விசிட் விசா காலாவதி கோவிட் மூலம் நீட்டிக்கப்பட்ட நடைமுறைக்கு முற்றுபுள்ளி, காலாவதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை

சவுதி அரேபியாவுக்கு விசிட் விசாவில் வருபவர்கள் காலாவதி தேதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குனரகம் இன்று(14/09/21) தெரிவித்துள்ளது. குடும்ப விசிட் விசாவில் இருந்தவர்களின் விசா முன்பு ஒரு வருடம் வரையில் புதுப்பிக்கப்பட்டன. அவர்களில் பலர் கடந்த நாட்களில் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முயன்ற நேரத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளன.

கோவிட் மூலம் பயணம் தடைபட்ட பிறகு விசிட் விசா ஒரு வருடத்திற்கும் மேலாக புதுப்பிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் வரையில் இப்படி புதுப்பித்தல் செய்து பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கான விசாவில் வந்தவர்கள். மேலும் கொரோனா காரணமாக காலாவதியான அவர்களின் விசாக்கள் மூன்று மாதங்களுக்கு இந்த காலகட்டத்தில் பல முறை புதுப்பிக்கப்பட்டன. இதற்கு 100 ரியால் கட்டணம் மற்றும் காப்பீடு தொகை மட்டுமே செலவானது. இது பல சவுதியில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தது. இந்நிலையில் இந்த சலுகை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிமேல் விசா எடுக்கும் நபர்கள் அதனுடைய காலாவதி முடியும் வரை மட்டுமே சவுதியில் தங்கியிருக்க முடியும்.

Add your comments to Saudi News

சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Image : 2020 Saudi National Day Photo

சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று(14/09/21) செவ்வாய்கிழமை வெளியாகியுள்ள செய்தியில் இந்த மாதம் 23-ஆம் தேதி(வியாழக்கிழமை) தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Add your comments to Saudi News

சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைத்து சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் நேற்று புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளுடன் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது

Image Credit: Saudi Airlines

சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைத்து சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் நேற்று புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டவர்கள்(தொழிலாளர்கள்) மற்றும் விசிட் விசாவில் வருகின்ற நபர்களுக்கும் தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் நேற்று(13/09/21) அறிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி எடுக்காத நபர்களோ அல்லது சவுதி அங்கீகாரம் பெற்ற கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே எடுத்தவர்களோ சவுதி அரேபியாவுக்கு வந்தால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் எதிர்மறையான(Negative) சான்றிதழை பயணத்தின் போது உடன் எடுத்துவர வேண்டும்.

சவுதி அரேபியாவில் நீங்கள் நுழைந்த பிறகு ஐந்து நாட்கள் மட்டும் நிறுவன தனிமைப்படுத்தல் செய்தால் போதுமானது, ஆனால் ஐந்து நாட்களுக்குள் இவர்கள் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். முதல் பரிசோதனை சவுதி அரேபியாவிற்குள் நுழைத்து 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும் மற்றும் இரண்டாவது பரிசோதனை நிறுவன தனிமைப்படுத்தலின் ஐந்தாவது நாளில் நடைபெற வேண்டும். ஐந்தாவது நாளில் நடத்தப்படும் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் பயணி தனிமைப்படுத்தலை முடித்து கொள்ளலாம். தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி சவுதி அரேபியாவில் நுழையும் நபர்களுக்கு ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் ஆகும். இந்த புதிய உத்தரவு வருகின்ற செப்டம்பர்-23,2021 மதியம் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது எனவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Add your comments to Saudi News